முருங்கைக்காய் சாம்பார்
Share
முருங்கைக்காய் சாம்பார்
முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம்,
காயம் – 1/4 தேக்கரண்டி,
முருங்கைக்காய் துண்டுகள் – 8,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 1,
சின்ன வெங்காயம் – 3,
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி,
மல்லித் தூள் – 2 மேஜைக் கரண்டி,
சீரகத் தூள் – 1 மேஜைக் கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
மல்லித் தழை – சிறிது
தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் – 3 மேஜைக் கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி, வெங்காயம் – சிறிது, கறிவேப்பிலை – சிறிது
முருங்கைக்காய் சாம்பார் செய்முறை:
Method
ஒரு குக்கரில் பருப்பு, காயம், மஞ்சள் தூள் கலந்து அவை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். புளியை 300 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சாம்பார் வைக்கும் பாத்திரத்தில் 300 மில்லி புளித் தண்ணீருடன் முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும். 5 நிமிடங்கள் ஆனதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா வாடை போகும்வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வேகவைத்துள்ள பருப்பை போட்டு கலக்கி விடவும். கொதித்ததும் மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடுங்கள்.
தாளிக்க அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும். இப்போது சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி.
முருங்கைக்காய் மருத்துவ பயன்கள்
முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை.
for more முருங்கைக்காய் மருத்துவ பயன்கள்
Hits: 1713, Rating : ( 5 ) by 1 User(s).